states

img

சாதிச்சான்றிதழ் செல்லாது : பாஜக எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்ய கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்

ஜார்கண்ட் பாஜக எம்எல்ஏ தான் பிறந்த ராஜஸ்தானில் இருந்து இருப்பிடம் மாறி சாதிச்சான்றிதழ் வாங்கி போட்டியிட்டதால் சான்றிதழ் செல்லாது என்பதால் அவரை தகுதி நீக்கம் செய்ய கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
ஜார்கண்ட்டில் உள்ள கான்கே தனி தொகுதியில் பாஜக சார்பில் சம்ரிலால் என்பவர் கடந்த 2019ல் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் லால் ராஜஸ்தானில் பிறந்த நிலையில் ஜார்கண்ட்டில் வந்து ஜாதிச் சான்றிதழ் வாங்கி கான்கே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.  எனவே அவரது சாதி சான்றிதழ் செல்லாது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஆளும் கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி கட்சியின் தொழிலாளர் துறை அமைச்சர் சத்யானந்த் போக்தா ஆளுநரைச் சந்தித்தார்.  சம்ரிலால் ராஜஸ்தானில் பிறந்தவர் என்பதால் ஜார்கண்ட்டில் வாங்கப்பட்ட அவரது சாதி சான்றிதழ் அடிப்படையில் அவரால் தனி தொகுதியில் போட்டியிட இயலாது. ஜார்கண்ட்டில் வாங்கப்பட்ட அவரது ஜாதி சான்றிதழ் செல்லாது. எனவே அவரை தகுதி நீக்கம் செய்து அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து கேட்க பாஜக எம்எல்ஏ லாலுக்கு அழைத்தபோது அவர் பதில் அளிக்கவில்லை